Friday, October 2, 2015

கோட்டூர் ஆலய திருப்பணி (1)


சிவபுண்ணிய திருப்பணி அழைப்பு!


“தெளிவு குருவின் திரு மேனி காண்டல்” ஆதி குருவாய் நமக்கு வழி காட்டும்
நம் சிவ பெருமானின் குரு ஈஸ்வரமுடையார் கோவில் திருப்பணிக்கு அழைப்பு.


"பிறவாத பேரின்ப வாழ்வுக்கு வழிகாட்டும் சிவாலயம் கட்டிப்  கைலாய முக்திப் பேற்றை பெற்றார்கள்! " நம் முன்னோர்கள். நம் முன்னோர்களால் கட்டப்பட்ட குரு ஈஸ்வரமுடையார்   என்னும் 1000  மேல் பழமையான சிவாலயம் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே கோட்டூரில் அமைந்துள்ளது. இவ்வாலயம் ஏழு ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் முட்புதற்கள் மற்றும் மரங்கள் சூழப்பட்டு ஆலயம் மக்கள் யாரும் காண இயலா நிலையில் இருந்தது. ஆலய அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டப இருபுற சுவற்றிலும் அரசமரங்கள் வளர்ந்து மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது (இணைப்பு: புகைப்படம்). மேலும் தாயார் சன்னதி முற்றிலும் காணக்கிடையா நிலையில் உள்ளது. மக்கள் யாரும் காண இயலா நிலையில் இருந்த இவ்வாலயம் தூத்துக்குடியை சார்ந்த திருத்தாண்டக வேந்தர் உழவாரபணிக்குழு மூலம் ஆலயம் கண்டறியப்பட்டு முட்புதர்கள் யாவும் முற்றிலும் அகற்றப்பட்டு கோவில் செல்ல பாதை அமைக்கப்பட்டது. ஈசனின் திருக்கருணையால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயத்தில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது .திருப்பணிக்கு முந்தைய புகைபடங்கள் உங்களது பார்வைக்கு இணைத்துள்ளேன்.

திருப்பணிக்கு முன்

     
                             திருப்பணிக்கு முன்



திருப்பணிக்கு முன்




திருப்பணிக்கு முன்




திருப்பணிக்கு முன்


குருஈஸ்வரமுடையாரின் தனி பெருங்கருணையினாலும், சமூக வலைதள நண்பர்கள் மற்றும் அடியார்களின் பேருதவியினாலும் சுவாமியின் கருவறை, அர்த்தமண்டபம் முழுமையாக கற்தூண்கள் பிரிக்கப்பட்டு மரங்கள் யாவும் அகற்றப்பட்டு ஆலய பழமை மாறாமல் சுவாமியின் கருவறை, அர்த்தமண்டபம் கற்கட்டிடமாகவே புணரமைப்பு செய்யபட்டுள்ளது.

 திருப்பணிக்கு பின்








திருப்பணிக்கு பின்


.மேலும் நூறு ஆண்டுகளுக்கு பின் இவ்வாலய குடமுழுக்கு நடைபெற இருப்பதால் ஆலய விமானம் மற்றும் மிகவும் சிதிலமடைந்த மகா மண்டபம் புதியதாக கட்டப்படவேண்டும்.

புதிதாய் ஆலயங்கள் கட்டுவதை காட்டிலும் பழமையான ஆலயங்களை அதன் பழமை மாறாமல் புத்தாக்கம் செய்வது அவ்வாலாயத்தை எழுப்பிய மகான்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்கும்.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயத்தில் முற்றிலும் காணக்கிடையா நிலையில் உள்ள தாயார் சன்னதி புதிதாக கட்டி எழுப்ப தீர்மானித்துள்ளோம். தாய்க்கு சன்னதி அமைத்து விமானம் கட்டிட சிவனடியார்களின் பேருதவியை வேண்டி நிற்கிறோம்.
.
  கோவிலின் நிலையை தங்களுக்கு நேரில் காண்பிக்கவும் காத்திருக்கிறோம்.
மேலும் கோவிலின் திருப்பணி தொண்டிற்கு எனது அலை பேசி 9786770720  தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்