Sunday, February 3, 2013

ஓதிமலை முருகன் பதிவு - 1


ஸ்ரீ
செந்தில் ஆனந்த விநாயகர் துணை

 காப்பு
ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்ஞமரில் அங்சேலன் வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இரு காலுந்தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!

ஒதிமலை முருகன்:

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பது வழக்கு. நம்மில் பலரும் காண தவறிய இனியும் காண தவற கூடாத அபூர்வ முருகாலயங்களில் ஒன்று ஒதிமலை முருகன் ஆலயம்

ஒதிமலை முருகனின் அபூர்வ அமைப்பு:

நாம் முருகனை ஆறு படைவீடுகளிலும் ஆறு விதமாய் தரிசித்திருப்போம் ஆனால் இங்கு மட்டும் அபூர்வமாய் ஐந்து முகத்தொடும் எட்டு கரங்களோடும் நமக்கு காட்சி அளிக்கிறார்
அது ஏன் ஐந்து முக தரிசனம்?

ஒதிமலை இது போகருக்கு சொந்தமான மலை இங்கு இருந்தே போகர் தவம் மற்றும் 

யாகங்கள் செய்தார் தலையாய சித்தர்  என்று போற்றப்படும் அகத்தியரால் பதினெண் 

சித்தர்களில் சித்துகளில் இவர்தான் முதல் சித்தர் என்று போற்றப்படும் போகருக்கு வழி 

காட்டுவதற்காக “ஐம்முக” சிவனாக காட்சி தருகிறார்.ஓதிமலை இது _ முருகப் பெருமான் குடி கொண்ட மலைகளுள், மிகவும் உயர்ந்தது இந்த ஓதிமலையே என்று சொல்லப்படுகிறது. எழுபது டிகிரி கோணத்தில் செங்குத்தாக மலை அமைந்துள்ளது. தனிமையையும் தியானத்தையும் அமைதியையும் விரும்புபவர்களுக்கு ஏற்ற போகரின் தவபூமி இது!


போகரின் சிறப்பு:

போகருக்காக “ஐம்முக” சிவனாக வரம் அளிக்கும் ஒதிமலை முருகன் பற்றி அறியும் 

போது போகரின் சிறப்பை அறிந்து கொள்வது அவசியமாகிறது போகரின் சிறப்பை

அகத்தியர் தனது பெருநூலான அகத்தியர் -12000 லதில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்

“சித்தான சித்துமுனி போகநாதர்
சிறந்தபதி னெண்பேரி லுயர்ந்த சீலன்
கத்தனெனுங் காலாங்கி நாதர் சீஷன்
கனமான சீனபதிக் குகந்தபாலன்
முத்தான வதிசயங்கள் யாவற்றுந்தான்
மூதுலகில் கண்டறிந்த முதல்வன் சித்தன்
நித்தமும் மாசிலாக் கடவுள் தம்மை
நீணீலத்தில் மறவாத போகர் தானே”
                                    அகத்தியர் -12000 4 – 487

போகரின் ஞானத்தை அகத்தியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“கேளப்பா போகரவர் சிறுவன்காலம்
கெடியான விளந்தையிலே வதிசயங்கள்
தாளப்பா தாய்பாலை யுண்ணும்போது
தகமையுட னாறுதிங்கள் நடக்கும்போது
வாளப்பா ரம்பம்போல் வார்த்தைகூறும்
வளமான லோகவ திசயங்கள் கூறும்
மீளப்பா ஞானப்பால் தானேகேட்கும்
விட்ட குறை வாய்த்ததென்று கூறும்பாரே!”
                                    அகத்தியர் -12000 4 – 493

போகரவர் ஆறுமாத குழந்தையாக தாய்பாலை உண்ணும் போது பேசியதையும்  லோக அதிசயங்கள் யாவும் கூறியதையும் ஞானப்பால் கேட்டதையும்  இது விட்டகுறை வாய்த்ததினால்  நிகழ்தது எனவும் குருமுனியாம் அகத்தியர்
தனது பெருநூலான அகத்தியர் -12000ல் கூறுகிறார்.

போகர் உருவாக்கிய  நவபாசாண சிலைகள்:

 போகர் உருவாக்கிய நவபாசாண  சிலைகளில் இரண்டு மட்டும் நமக்கு தரிசிக்க கிடைக்கிறது ஒன்று பழனி இன்னொன்று கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலாகும்.


போகரும் ஓதிமலையும்:

பதினெட்டுச் சித்தர்களில் பிரதானமானவரான போகர், இந்த ஓதிமலை குமார சுப்ரமண்யரைத் தரிசித்துள்ளார். அப்போது, முருகப் பெருமானுக்கு ஆறு திருமுகமும், 12 திருக்கரங்களும் இருந்ததாம். ஓதிமலையின் வடகிழக்கில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பகுதியில் அக்னி வளர்த்து, மூன்று யாகங்கள் செய்து முருகப் பெருமானை வழிபட்டாராம் போகர். யாகத்தால் உண்டான சாம்பல் இன்றும் அந்தப் பகுதியில், வெண்ணிற மணல் போல் - விபூதியாய் காட்சி தருகிறது. எனவே, இந்த இடத்தை 'விபூதிக் காடு' என்று வழங்கி வந்தனர். இப்போது 'பூதிக் காடு' என அழைக்கப்படுகிறது.

யாகம் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த இடத்தில் இருந்து, தோண்டத் தோண்ட விபூதி நிறத்திலான மணல்தான் கிடைக்கிறது. அதனால், இந்தப் பகுதி முழுதும் உள்ள மணல், போகர் செய்த யாகத்தின் மிச்சமாகக் காட்சி தருவதாகச் சொல்வர். சில காலத்துக்கு முன் வரை, ஓதிமலை ஆலயத்தின் பக்தர்களுக்கு, இந்த வெண் மணலை விபூதிப் பிரசாதமாக வழங்கி வந்தனர்.

ஆறு தலையும், 12 திருக்கரமும் கொண்டு ஆதியில் விளங்கிய ஓதிமலை முருகப் பெருமான், இன்று ஐந்து திருமுகத்துடன் எட்டுத் திருக்கரங்கள் கொண்டு காட்சி தருவதற்கு போகரே காரணம்! எப்படி என்கிறீர்களா?


இந்தப் பகுதியில், மூன்றாவது யாகத்தை முடித்த பிறகு போகருக்கு தரிசனம் தந்தாராம் முருகப் பெருமான். இதையடுத்து, பழநியம்பதிக்கு சென்று அங்கே நவபாஷாண முருகப் பெருமானது சிலையை வடிக்க எண்ணினார் போகர். ஆனால், ஓதிமலையில் இருந்து பழநிக்குச் செல்லும் வழி தெரியாமல் தவித்த போகர், ஓதிமலை முருகனிடமே இதைத் தெரிவித்தார். உடனே, தன் திருமுகத்தில் இருந்து ஒன்றையும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வடிவமெடுத்து, போகருக்கு உதவுவதற்காக மலையில் இருந்து இறங்கினாராம் (இதனால்தான், எஞ்சிய ஐந்து திருமுகம் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் இங்கு காட்சி தருகிறார் குமார சுப்ரமண்யர்) முருகப் பெருமான். போகரும் பின்தொடர்ந்தார்.

ஓதிமலையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தை அடைந்ததும் பழநிக்குச் செல்லும் வழியைப் போகருக்குக் காட்டியருளிய முருகன், அங்கிருந்து மறைந்தார். குமரனது அருளைப் போற்றியபடியே பழநியை நோக்கிப் பயணித்தார் போகர்.

ஓதிமலையில் இருந்து இறங்கி வந்து, போகருக்குப் பழநி செல்லும் வழியைக் காட்டிய அதே இடத்தில் - அதே கோலத்தில்... கோயில் கொண்டார் முருகப் பெருமான். அந்த இடம்... குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவில் என்று வழங்கப்படுகிறது. ஏக முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் குமாரபாளையத்தில் அருள் பாலித்து வருகிறார்.

ஒதிமலை முருகன் வரலாற்றை அறிந்த  நாம் இனி வரும் பதிவுகளில் ஓதிமலை பற்றிய வரலாறை அறியலாம்...........

Saturday, January 19, 2013

அறிமுகம்!

ஸ்ரீ

நற்றுணையாவது நமச்சிவாயவே!

 செந்தில் ஆனந்த விநாயகர் துணை

இனிதே ஆரம்பம்:

ஐந்து முகத்தோடும் எட்டு கரங்களோடும் அபூர்வமாய்  காட்சி அளிக்கும் எல்லாம் வல்ல ஓதியப்பரின் தனி பெரும் கருணையாலும் சித்தர்களின் வழி காட்டுதலாலும் போகரின் தவபூமியாம் ஓதிமலை முருகன் பற்றிய வலைத்தளம் இனிதே ஆரம்பம்!
அகத்தியர் அருளிய சுப்ரமணிய செபம்:

கேட்டதெல்லாம் கிடைக்க செய்யும் அகத்தியர் அருளிய  சுப்ரமணிய செபம்:

       "அம் உம்  ஓம் ஸ்ரீம் ஈம் வம் சரவணபவதேவாய

          அறுமுகவா சிவசுப்ர மண்யநமா!
                                                                                    -அகத்தியர் பூரணசூத்திரம் 

இனி வரும் பதிவுகளில் ஓதிமலை பற்றிய அபூர்வ தகவல்களை காணலாம்.

Lord Muruga